உலகம்

உலகளவில் 25.96 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என வலியுறுத்தப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தடுப்பூசி போதும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 96 லட்சத்து 79 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 96 லட்சத்து 77 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51 லட்சத்து 91 ஆயிரத்து 266 பேர் உயிரிழந்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  உலகில் முதன் முறையாக பிட்காயினை அங்கீகரித்துள்ள நாடு!
Back to top button
error: