தமிழ்நாடு

பள்ளி மாணவிகள் 8 பேருக்கு கொரோனா – பள்ளிகளுக்கு விடுமுறை!!

குன்னூர் அருகே இரண்டு பள்ளிகளில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கல்வி பயிலும் நிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் தொற்று மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் பயின்ற வகுப்புகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்கள் விடுமுறைகளை அறிவிக்கப்பட்டு வருகிறது.

வந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட்ரோடு பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் உள்ள 5 மாணவிகளுக்கும், அதே பகுதியில் உள்ள வேறு பெண்கள் பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளுக்கு என மொத்தம் 8 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுத்தம் செய்தல் பணிக்காக இரண்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் பணி நடைபெற்று வருகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!!
Back to top button
error: