இந்தியா

மகாராஷ்டிராவில் புதிதாக 58,952 பேருக்கு கொரோனா..

மகாராஷ்டிராவில் புதிதாக 58 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிர கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் நேற்று புதிதாக 58 ஆயிரத்து 952 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 35 லட்சத்து 78 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 39 ஆயிரத்து 624 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 278 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 29 லட்சத்து 5 ஆயிரத்து 721 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி 6 லட்சத்து 12 ஆயிரத்து 70 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:  திருப்பதியில் ஏப் 11ம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: