இந்தியா

இந்திய துணை ராணுவ வீரர்கள் 421 பேருக்கு கொரோனா..

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், ஒரே நாளில் 421 துணை ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவில் வேகம் காட்டி வரும் நிலையில், ராணுவத்தினர் பலருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று ஒரே நாளில், துணை ராணுவ படைப் பிரிவுகளைச் சேர்ந்த 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எல்லை பாதுகாப்புப்படை பிரிவில் 311 பேருக்கும், சி.ஐ.எஸ்.எப் படைப்பிரிவினரரில் 43 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சி.ஆர்.பி.எப். பிரிவில், 28 பேர் புதிதாக தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் ஐ.டி.பி.பீ. படை பிரிவினரரில் மேலும் 31 பேருக்கும், எஸ்.எஸ்.பி. படைப்பிரிவில் கூடுதலாக 8 பேருக்கும், என்.டி.ஆர்.எப். படைப்பிரிவினர் 19 பேருக்கும் மற்றும் என்.எஸ்.சி. பிரிவுகளில் 13 பேருக்கும் நேற்று ஒருநாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் துணை ராணுவத்தில் இதுவரை 55 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், 53 ஆயிரத்து 514 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துவிட்டதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 208 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  “மக்களின் வாழ்வாதாரத்தைவிட வாழ்வு முக்கியம்” - தமிழிசை செளந்தரராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: