இந்தியா

இந்தியாவில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் வருகின்றன.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,68,833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பானது நேற்றைய விட 4,631 பேர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தினசரி தொற்று விகிதம் தற்போது 16.66% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 402 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை மொத்தமாக கொரோனா தொற்றுக்கு 4,85,752 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து 1,22,684 பேர் வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 14,17,820 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அந்த வகையில் 6,041 பேர் ஓமிக்ரான் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: