இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 353 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதேபோல, நேற்று (ஏப்ரல் 15) 1,185 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 25 லட்சத்து 47 ஆயிரத்து 866ஆக உள்ளது.

தற்போது, 15 லட்சத்து 69 ஆயிரத்து 743 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தமாக 11 கோடியே 72 லட்சத்து 23 ஆயிரத்து 509 தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:  நாட்டிலேயே தடுப்பூசியை வீண் செய்ததில் தமிழகம் தான் முதலிடம்்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: