இந்தியா

இந்தியாவில் புதிதாக 1.84 லட்சம் பேருக்கு கொரோனா..

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,027 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,23,36,036 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 82,339 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 13,65,704 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 11,11,79,578 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  தடுப்பூசி போட்டுக்கொண்ட நக்மாவுக்கு கொரோனா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: