இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 1.68 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை முதல் முறையாக ஒரே நாளில் 1 லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் 904 பேர் கொரோனாவுக்‍கு பலியாகிவுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்து 717-ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்‍கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 179-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், 12 லட்சத்து ஓராயிரத்து 9 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: