இந்தியா

இந்தியாவில் 2 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல், நேற்று (மே.4) 3,449 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292ஆக உள்ளது.

தற்போது, 34 லட்சத்து 47 ஆயிரத்து 133 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தமாக 15 கோடியே 89 லட்சத்து 32 ஆயிரத்து 921 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:  டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: