தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் 8000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7819 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 54 ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் தமிழகத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பரவத்தொடங்கி 13 மாதங்கள் ஆன நிலையில், தினசரி பாதிப்பில் முதல் முறையாக 8000-ஐ நெருங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  தமிழகத்தில் இன்று 3,500-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: