தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் தற்போது தீவிரமாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்று காரணமாக மக்களிடையே அச்சம் நிலவியுள்ளது. அந்த வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து வரும் நாட்களில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பல்வேறு அவதாரங்களை எடுத்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய அவதாரமாக தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் தொற்று அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஓமைக்ரான் தொற்று உருமாறிய கொரோனா வகைகளில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த தொற்று நெதர்லாந்து, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை இந்தியாவில் மட்டும் 213 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓமைக்ரான் பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நைஜீரியா நாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 33 பேருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 33 பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருத்தர் கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் 3வது இடத்தில் தமிழகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 24 பேருக்கு S ஜீன் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் நாளை வெளியாகும். இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: