இந்தியா

கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா உறுதி..!

மகா கும்பமேளாவில் 102 பக்தர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மகா கும்பமேளா தொடங்கி 12 நாட்கள் கடந்துள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது.

கங்கை நதிக்கரையில் புனித நீராட இதுவரை சுமார் 28 லட்சம் பக்தர்கள் ஹரித்துவாருக்கு வந்துள்ளனர். மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்ள வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த கும்பமேளாவில் பங்கேற்ற 28 லட்சம் பேரில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 நாட்களாக நடைபெற்ற கும்பமேளாவில் 18,169 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியான 102 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: