நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் 3,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் கண்டறியப்படுகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில், 2.95 லட்சம் பேர் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 3,157 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் டெல்லியில் அதிகபட்சமாக 1,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக கேரளா, உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளன. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு வரும் பாதிப்புகளில் 86 சதவீத பாதிப்புகள் இந்த ஐந்து மாநிலங்களில் உள்ளன.
மறுபுறம், கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,723 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, நாட்டில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 19,500ஐ எட்டியுள்ளது. இதுவரை 189 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 4.02 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh