மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன, இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 4,30,54,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தினசரி கொரோனா தொற்று விகிதம் 0.56 சதவீதமாக உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் தற்போது 15,079 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,22,149 ஆக உள்ளது.
டெல்லியில் நேற்று 1,042 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன, இது பிப்ரவரி 10 ஆம் தேதிக்குப் பிறகு அதிகபட்சமாக 4.64 சதவீதமாக உள்ளது. நேற்று மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றால் இறந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் விதியை மீறுபவர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh