உலகம்

உலகளவில் 10.31 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தணியவில்லை. எனினும், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.31 கோடியை தாண்டி உள்ளது. உலகளவில் 10.31 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 7.47 கோடி பேர் குணமடைந்த நிலையில் 22.27 லட்சம் பேர் இறந்தனர்.

இதில் அமெரிக்கா அதிகபட்ச பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 2.66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 1.37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,889 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Back to top button
error: Content is protected !!