தமிழ்நாடுமாவட்டம்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்த கொரோனா தொற்று தற்போது சற்று உயர்ந்து கொண்டே வருகிறது.

அதன்படி, இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,639 ஆக அதிகரித்துள்ளது. 1,58,623 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,639 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 1,517 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,80,686 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,399 ஆக உள்ளது.  கொரோனாவால் மேலும் 27 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,146 ஆக உயர்ந்துள்ளது.  அரசு மருத்துவமனைகளில் 21 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!!
Back to top button
error: