தமிழ்நாடுமாவட்டம்

திருப்பூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா – 3 நாள் பள்ளிக்கு விடுமுறை!

திருப்பூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
Back to top button
error: