தமிழ்நாடு

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி நடத்தப்பட இருப்பதால் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் வழியாக வரவேற்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிகளை மேற்கொள்ள விரும்பும் நாமக்கல் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் த.செல்வகுமாரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நாமக்கல் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இந்த ஆண்டுக்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 5 வரையுள்ள தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை செலுத்த வேண்டும்.

இதன் கீழ் பயிற்சி பெறுவதற்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் விண்ணப்பதாரர் ஜூலை 1 ஆம் தேதிக்குள் 17 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.14,850 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தி செய்த பின் முதல்வர், கூட்டுறவு மேலாண்மை நிலையம், முருகன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில் இந்த ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடு தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட 3 படிப்புகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 5:30 பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து அவற்றை கூரியர் மற்றும் பதிவுத்தபால் மூலமாக விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: