தமிழ்நாடுமாவட்டம்

சமையல் கேஸ் விலை 50 ரூபாய் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோது, விலையை குறைத்தனர்.

ஜூன், ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்கவும், காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தன. அதன்படி டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோகத்திற்காக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு 769 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மட்டுமின்றி சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்கள் உள்பட நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போதுள்ள விலையில் இருந்து கூடுதலாக 50 ரூபாய் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. சென்னையை பொறுத்தவரை இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் 50 உயர்த்தப்பட்டு ரூ.785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோலும், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம், கேஸ் விலை உயர்ந்து வருவதால் ஏற்கனவே விழி பிதிங்கியுள்ள நடுத்தர மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Back to top button
error: Content is protected !!