சினிமா

‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா செய்த மகத்தான சேவை பாராட்டு குவிந்து வருகிறது!!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘குக்’கள் மற்றும் கோமாளிகள் வேற லெவலில் பிரபலமாகி தற்போது அதில் சிலர் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தர்ஷா குப்தா என்பதும் அவர் தற்போது ’ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சாலை ஓரங்களில் வாழும் மக்கள் பசியால் பட்டினியால் வாடுவவதை அடுத்து இந்த தர்ஷா குப்தா, இதற்காக ஒரு அமைப்பு ஒன்றின் மூலம் தன்னால் முயன்ற உதவிகளை சாலையோர மக்களுக்கு செய்து வருகிறார்.

மேலும் தானே நேரில் சென்று சாலையோரம் வாழும் ஏழை மக்களுக்கு அவர் உணவு கொடுத்து வருகிறார். சாலை ஓரத்தில் உதவும் கரங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு சுயமாக நாம் முன்வந்து உதவவில்லை என்றால் வேறு யார் உதவுவார்கள்? என்றும், உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். சற்றுமுன் கூட அவர் இன்றைய நாள் இனிதே முடிந்தது என்று கூறி சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: