உலகம்

தாய்க்கு பிரசவம் பார்த்த 9 வயது மகள்! உலக சாதனை புரிந்த சிறுமிக்கு குவியும் பாராட்டு..!

அமெரிக்காவில் பிரசவ வலி வந்த தனது தாயுக்கு 9வயது மகளே பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ்சோரி மாகாணத்தை சேர்ந்த பெண் ஏஞ்சலிக்கா குண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு அகேலா குண் என்ற 9 வயது மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஏஞ்சலிக்கா மீண்டும் கருவுற்ற நிலையில், இவரது கணவர் அலுவலகத்திற்கு சென்ற நேரத்தில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரை ஏஞ்சலிக்காவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

கணவர் அலுவலகத்திலிருந்து கிளம்பியதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கொண்டதால், வர தாமதம் ஏற்பட்டுள்ளது.

21 60e2b97556998

இதனால், ஏஞ்சலிக்கா தனது மகளை அழைத்து தனக்கு பிரசவம் பார்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்லி கொடுத்துள்ளார்.

21 60e2b9753fa5d

ஏஞ்சலிக்கா ஏற்கனவே ஒரு நர்ஸ் என்பதால் அதை அவர் சொல்ல சொல்ல 9 வயது மகள் தனது தாய்க்கு பிரசவம் பார்த்தார். இதில் வெற்றிகரமாக அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிரிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: