சினிமாபொழுதுபோக்கு

‘எனக்கும் ஆரிக்கும் இருக்க சண்டையை யூஸ் பண்ணிக்கிறிங்க’ – பாலாவின் பதிலடியால் மிரண்டுபோன போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது Ticket To Finale போட்டி போயிக்கொண்டுள்ளது. யார் ஜெயிக்க போகிறார்கள் என்றே தெரியாத அளவிற்கு சஸ்பென்சாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது.

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது தான் ஆரம்பித்தது போல உள்ளது. ஆனால் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த பிக் பாஸ் சீசனில் அதிகமான ஆதரவு என்றால் அது ஆரிக்கு தான். அவர் தான் ஜெயிக்க போவதாக பலரும் கூறி வருகின்றனர். மேலும் பாலா மற்றும் ஆரி இடையே பல சண்டைகள் ஏற்பட்டது. பாலா ஆரியை காட்டுத்தனமாக கத்தினார்.

போன வார கமல் எபிசோடிலும் இந்த பிரச்சனைகளை பேசி தீர்த்து வைத்தார். அதன் பிறகு பாலா தனது கோவத்தையும் விடுத்து ஆரியிடம் பேசினார். மேலும் இந்த ஷோவின் இறுதி பகுதி என்பதால் தற்போது Ticket To Finale நடந்துகொண்டுள்ளது. அர்ச்சனா இருக்கும்போது எந்த ஒரு போட்டியிலும் ஈடுபாடு காட்டாமல் இருந்த ரியோ, சோம் இப்பொழுது தான் விளையாடவே ஆரம்பித்துள்ளனர்.

ரியோ இதுவரை நடந்த Ticket To Finale டாஸ்கில் அற்புதமாக விளையாடினார். அவர் தான் ரேங்கிலும் முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது. மழை பெய்யும் காரணத்தால் இதுவரையிலும் பிஸிக்கல் டாஸ்க் அவ்வளவாக கொடுக்கப்படவில்லை.

bb3 1

மேலும் நேற்று ஆரம்பிக்கப்பட்ட டாஸ்க் இதுவரையிலும் தொடருகிறது. இந்த தடவை ஆரி எழுந்து கார்டை எடுக்க ரம்யா நேற்று ஒன் சைடாக விளையாடுவதாக சொன்னார் என்று ஆரம்பிக்க அதற்கு ரம்யா இடை மறைகிறார். இதனால் கடுப்பாகும் ஆரி ரூல்ஸில் இடையில் பேச கூடாதுனு இருக்கு பிரேக் பண்ணாதீங்க என்று கோவமாக பேசுகிறார்.

அதற்கும் ரம்யா தனது நக்கல் சிரிப்பை விடவில்லை. அடுத்த ப்ரோமோ தான் அல்டிமேட். இத்தனை நாட்கள் ஆரி மற்றும் பாலா இடையே நடந்த பிரச்சனைகளை மட்டுமே சொல்லி இரண்டு பேரையும் கெட்டவங்களா ஆகிட்டீங்க. நானோ இல்லை ஆரியோ சேஃப் கேம் விளையாட்டுல.

bb4 1

அப்படி விளையாட தெரியாததால தான் வில்லனா இருக்கோம் என்று சொல்ல ரம்யா முகத்தில் ஈ ஆடவில்லை. அனைவரும் தலையை தான் குனிந்துகொண்டனர். இத்தனை நாட்கள் வெளியான ப்ரோமோவில் இது தான் மாஸ் என பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!