சினிமாபொழுதுபோக்கு

கையில் பூனையுடன் செம போதையில் இருக்கும் தளபதி விஜய் – ட்ரெண்டாகும் மாஸ்டர் ஸ்டில்ஸ்..!

இன்னும் சில தினங்களில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளிவர இருக்கிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தினமும் ஓர் தகவல் வெளியிட்டு வருகின்றனர். தற்போது தளபதி கையில் ஓர் பூனையை வைத்து கொண்டு செம போதையில் இருப்பது போல் ஓர் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மாஸ்டர்:

தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் ஆகியோர்கள் நடித்துள்ள படம் தான் மாஸ்டர் திரைப்படம். இந்த படத்தை மாநகரம் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பாடல்கள் அனைத்தும் வெளிவந்து ஹிட்டாகி உள்ளது. கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தாமதமாகியது.

ErHouhqW4AAbm92

தற்போது மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு வரும் 13ம் தேதி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளார்கள்.

தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் தினமும் மாஸ்டர் திரைப்படத்தை பற்றிய புது புது தகவல்கள் வெளியாகி வருகிறது. தினமும் மாலை நேரத்தில் மாஸ்டர் படத்தின் ப்ரோமோவை வெளியிட்டு வருகின்றனர். அவை அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் தளபதி விஜய் கையில் ஓர் பூனையை வைத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் விஜய் பார்ப்பதற்கு செம போதையில் இருப்பதாக தெரிகிறது. மற்றொரு புகை படத்தில் விஜய் கேம் விளையாடி கொண்டிருப்போது போல் உள்ளார். மேலும் மாளவிகா மோஹனுடன் கல்லூரியில் இருப்பது போலவும் ஓர் புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது வெளிவந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Back to top button
error: Content is protected !!