உடல் எடையை குறைத்து சிக்குன்னு மாறிய காமெடி நடிகை..
நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை வித்யூலேகா, தற்போது 27 கிலோ உடல் எடையினை குறைந்து அவரை கிண்டல் செய்தவர்கள் முன்பு சாதித்து காட்டியுள்ளார். வித்யூலேகாவின் இந்த மாற்றம் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஊக்கமாக உள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகைகளுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் இருப்பதில்லை. நகைச்சுவையாக நடிப்பதிலும் பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. சிலர் மட்டுமே இதில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகை தான், வித்யூலேகா. இவர் முன்னாள் நடிகரான மோகன் ராம் என்பவரின் மகள் ஆவார். இவர் நடிகர் சந்தானத்துடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரை அனைவரும் அதிகமான உடல் எடை காரணமாக கிண்டல் செய்து வந்தனர். இதன் காரணமாகவே இவர் நகைச்சுவை துறையில் நடிகையாக வந்துள்ளார் என்று தெரிகிறது. இப்படியாக இருக்க கடந்த பொது முடக்கத்தின் போது இவர் யாரும் நினைத்து பார்க்காத அளவிற்கு தனது உடல் எடையினை குறைத்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆச்சிரியம் அடைந்தனர். இதனை அடுத்து மேலும் தனது உடல் எடையினை குறைக்க போவதாக தெரிவித்து வந்தார்.
அதே போல் தற்போது சரமாரியாக தனது உடல் எடையினை குறைந்து அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளார். தற்போது மொத்தமாக 27 கிலோ எடையினை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் வித்யூலேகா. இவரது இந்த முயற்சி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
உடல் எடையை குறைந்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது லைக்குகளை அள்ளுகிறது.