தமிழ்நாடு

செப்.30ம் தேதி ஆட்சியர் அலுவலக முற்றுகை போரட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!!

தமிழகத்தில் விவாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான முதல் முறையாக வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் விவசாயிகளின் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ. 33.03 கோடியில் செயல்படுத்தப்படும். சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றது.

இந்த நிலையில் தற்போது திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் 2020 – 2021 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை உடனே மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். விவசாயிகளின் நெல்லை தங்குதடையின்றி உடனே கொள்முதல் செய்ய வேண்டும். பழைய நடைமுறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தார்.

மேலும் கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லவும் அதனை கண்காணிக்க விவசாயிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் போன்ற வலியுறுத்தி 30ஆம் தேதி திருவாரூர் தஞ்சாவூர் நாகை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: