ஆரோக்கியம்

காஃபி, டீ.. இரண்டில் எது உடலுக்கு நல்லது?

உலகம் முழுவதும் காலை எழுந்ததும் டீ அல்லது காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு.

நீண்ட காலமாகவே டீ மற்றும் காஃபி இந்த இரண்டில் எது மனித உடலுக்கு நல்லது மற்றும் சிறந்தது என்கிற ஒரு பேச்சு இருந்து வருகிறது.

டீ மற்றும் காஃபி இரண்டிலுமே மனித உடலுக்கு சிறிய அளவில் தீங்கு ஏற்படுத்தக்கூடிய கஃபைன் இருக்கிறது. ஆனாலும் கூட டீ மற்றும் காஃபி மூலம் பல நன்மைகளும் இருக்கிறது.

தூக்கம்

பிரிட்டனில் உள்ள சர்ரே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிகம் காஃபி குடிப்பவர்கள் இறவில் உறங்கும் போது சில சிக்கல்களை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது. ஆனால் அதே அளவு டீ குடிப்பவர்கள் இரவில் நல்ல தூக்கத்தை எதிர்கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெண்மையான பற்கள்

பற்களில் உள்ள வெண்மை நிறத்தை டீ மற்றும் காஃபி இரண்டில் உள்ள மூலப் பொருட்களுமே பாதிப்படையச் செய்கிறது என்பது தான் ஆய்வின் முடிவு. ஆனால் இரண்டில் டீ அல்லது காஃபி இந்த இரண்டில் எது பற்களின் வெண்மையை மிகவும் பாதிக்கச் செய்கிறது என்றால் அதற்கான பதில் டீ தான்.

மன ஒருங்கிணைப்பு

டீ மற்றும் காஃபியை தொடர்ச்சியாக அருந்தும் பலரிடம் உலகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவர்களில் டீ அருந்துபவர்கள் தான் சிக்கலான சூழ்நிலையை மன ஒருங்கிணைப்புடன் எதிர்கொள்வதில் வல்லவர்களாக உள்ளனர். காஃபி அருந்துபவர்கள் மன ஒருங்கிணைப்பு குறைவானவர்களாகவே உள்ளனர்.

எலும்புகள்

தினந்தோறும் டீ குடிப்பவர்களின் எலும்புகள் மிகவும் வலிமையானதாக உள்ளது. அதிலும் எலும்புகள் பலம் இழப்பவது இவர்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் அதே சமயம் காஃபியானது அவற்றை அருந்துபவர்களின் எலும்பின் பலத்தை பலவீனம் செய்யக்கூடிய மூலப் பொருட்களை கொண்டுள்ளது.

மொத்தத்தில்

உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு ஆய்வு முடிவுகளும் காஃபியை விட டீயை தான் உடலுக்கு நல்லது என்கிற முடிவை கொடுத்திருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் காஃபியை குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு என்று கூறிவிட முடியாது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தில் டீ மற்றும் காஃபி ஆகிய இரண்டுக்குமே முக்கிய பங்குகள் உண்டு என்பதை மறுக்க முடியாது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத செயல்கள்! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?
Back to top button
error: