தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்துள்ள 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் நிபந்தைகள் அடிப்படிடையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடனாளர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடன் பெற்றவர்கள் வட்டி காட்டாமல் கால தாமதம் செய்து வருகின்றனர். மேலும் நகையை மீட்கவும் தயக்கம் காட்டுகின்றனர். தற்போது தமிழகத்தில் நிலவும் நிதி நெருக்கடியில் முழு கடனையும் தள்ளுபடி செய்ய இயலாத நிலையில் அரசு உள்ளது. அதனால் நகை கடன் தள்ளுபடிக்கு கடும் நிபந்தனைகள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்காக கடனாளர்களின் விவரங்களை சேகரிக்க பணியாளர்களுக்கு கூட்டுறவு துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். நகை அடமானம் வைத்திருப்பவர்கள் இரு சக்கர வாகனம், கார் வைத்திருக்கிறார்களா என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் உண்மை நிலையை அறிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் சரி பார்க்கப்படுகிறது. மேலும் கடனாளர் அரசு ஊழியரா, கூட்டுறவு சங்க ஊழியரா, வேறு நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளவரா, ஏதேனும் கடன் தள்ளுபடியில் பயன் பெற்றுள்ளவரா போன்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் வாங்கிய நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி வருகிறது. மேலும் கடன் தள்ளுபடி பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு பிறகு கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி செய்வதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசுப் பேருந்துகளில் 18.93 கோடி பெண்கள் இலவச பயணம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!!!
Back to top button
error: