தமிழ்நாடு

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியமாக ரூ.25,000? முதல்வர் அறிவிப்பு!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று முன்னாள் எம்எல்ஏ.,க்களுக்கு ரூ.25,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் முன்னாள் எம்எல்ஏ.,க்களுக்கு ரூ.25,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் கூறியதாவது, ”சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகிற போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று சொன்னார்கள். ஏற்கனவே இந்த தொகை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், உயர்த்தப்பட்டது வெறும் அறிவிப்போடு நின்று விட்டது.

அந்த அறிவிப்பு தான் இன்று வரையில் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு முறைப்படி சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சி அதை செய்யவில்லை. ஆனால், திமுக ஆட்சி அமைந்ததற்கு பிறகு இன்னும் ஒரு நாள்தான் சட்டப்பேரவை நடைபெற இருக்கிறது. திங்கட்கிழமையுடன் அவைக்கூட்டம் முடியவிருக்கிறது. திங்கட்கிழமை அன்று, ஓய்வூதியத்தை 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கிடும் வகையில், சட்ட முன்வடிவினை இந்த அவையிலே கொண்டு வந்து, நிறைவேற்றி தரப்போகிறோம்” என கூறியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ‘உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவல்ல’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Back to top button
error: