தமிழ்நாடுமாவட்டம்

கொரோனா பரவல் எதிரொலி.. சுற்றுலா தலங்கள் மூடல்..!

கொரோனா பரவல் காரணமாக, அரசு அறிவித்தப்படி தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு அறிவித்துள்ள பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சர்வதேச சுற்றுலாதலமான திரிவேணி சங்கமம், விவேகானந்த மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் திற்பரப்பு அருவி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. திருவள்ளுவர்சிலை, விவேகானந்தா பாறைக்கு செல்லும் படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திற்பரப்பு அருவி நுழைவு வாயிலும் பூட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  முக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: