இந்தியா

ஆம்னி பஸ்சில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. கிளீனர் கைது..

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் இருந்து புனே நோக்கி தனியார் நிறுவன சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. பேருந்தின் முன் பக்கம் அமர்ந்து பயணம் செய்த 21 வயதுடைய இளம்பெண் ஒருவரை பேருந்தின் நடுப்பகுதிக்கு செல்லும்படி கிளீனர் கூறியுள்ளார்.

இதன்பின்னர், இளம்பெண்ணை நெருங்கிய கிளீனர், பேருந்திலிருந்து வெளியே வீசி விடுவேன் என்றும் கொலை செய்து விடுவேன் என்றும் அவரை மிரட்டி கிளீனர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் 2வது முறையும் மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். பேருந்து புனே வந்த பின்னர் ரஞ்சன்காவன் போலீசாரிடம் இளம்பெண் சம்பவம் பற்றி புகார் தெரிவித்து உள்ளார்.

அந்த இளம்பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கிளீனருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. எனினும், சம்பவம் நடந்தது வாஷிம் மாவட்டம் என்பதனால், புனே நகர போலீசார் புகாரை வாஷிம் மாவட்டத்தின் மாலேகாவன் நகர காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

Back to top button
error: Content is protected !!