தமிழ்நாடு

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தேர்வுகளின் முடிவு இன்று (செப்டம்பர் 13) வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் உருவான கொரோனா பேரலை காரணமாக இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. அதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாணவர்கள் தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை வைத்து 50 சதவீதமும், 11 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை வைத்து 20 சதவீதமும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை வைத்து மீதி 30 சதவீதமும் இறுதி மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டது.

தொடர்ந்து பொதுத்தேர்வுகளுக்கான இறுதி முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மீண்டுமாக தேர்வுகள் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக கருதிய மாணவர்கள், 12 ஆம் வகுப்பு தேர்வு எழுவுவதற்கு தவறிய தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நேரடி முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று (செப்டம்பர் 13) வெளியாகியுள்ளது.

அந்த வகையில் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 15, 16 ஆகிய நாட்களில் அந்தந்த மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான கட்டண அளவுகளை பொருத்தளவு, விடைத்தாள் நகலின் ஒரு பாடத்துக்கு ரூ.275, மறுகூட்டலில் உயிரியல் பாடத்துக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு – தேர்வர்கள் ஏமாற்றம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: