சினிமா

சிறகடிக்க ஆசை: இன்றைய எபிசோடில் வேலை கிடைத்து அல்வாவுடன் வீட்டிற்கு வரும் மனோஜ்

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், வேலை தேடிச் செல்லும் மனோஜுவை அசிங்கப்படுத்துகிறார் முத்து. இன்றைய எபிசோடில் மனோஜை அழைத்து ரோகினி இன்னைக்கு ஏதாவது ஒரு வேலையோட தான் நீங்க வரணும் என்கிறார். நீங்க இதை ரெக்வெஸ்ட் எடுத்துக்கலாம், இல்ல ஆர்டராவும் எடுத்துக்கலாம். ஆனா என்னால இனிமே முத்து, மீனா முன்னாடி அவமானப்பட முடியாது என ரோகிணி கூறிவிடுகிறார்.

உடனே மனோஜ் வேலை தேடி அங்கும் இங்கு அலைகிறார். ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இவர் படித்த படிப்பு ஓவர் குவாளிபிகேஷன் என்பதால் வேலை கிடைக்காமல் இருக்கிறது. உடனே ஹோட்டலில் ஒரு போர்டு வைத்துள்ளார்கள். அதனைப் பார்த்து உள்ளே செல்கிறார் மனோஜ் அங்கு சென்று இங்கு என்ன வேலை இருக்கிறது என கேட்கிறார்.

ரெண்டு சப்ளையர் ஒரு ஆர்டர் எடுக்க ஆள் தேவை எனக் கூற, உடனே யாருக்கு என கேட்கிறார்கள். எனக்கு தான் எனக் மனோஜ் கூறுகிறார். உடனே மனோஜிடம் உங்களுக்கு இதற்கு முன்பு ஹோட்டலில் வேலை செய்த அனுபவம் இருக்கிறதா என கேட்க அதெல்லாம் இல்லை ஆனால் செய்வேன் என்பது போல் கூறுகிறார். அதேபோல் சப்ளையருக்கு என்ன வேலை என கேட்க கிச்சனிலிருந்து ஒவ்வொரு பொருளா எடுத்து எடுத்து கொண்டு வந்து வைக்கணும் என பேசுகிறார்.

அப்போ ஆர்டர் எடுப்பவர்களுக்கு நோட்டில் எழுதி கொண்டு கொடுக்க வேண்டியது மட்டும் தான் அதனால் அந்த வேலையைவே நான் செய்கிறேன் என கூறுகிறார். நாளையிலிருந்து வேலைக்கு வந்து விடுகிறேன் எனக் கூற அதான் இன்னைக்கே வந்துட்டில்ல இன்னைக்கு ஜாயின் பண்ணிக்கோ என பேசுகிறார் ஹோட்டல் நிர்வாகி.

உடனே மனோஜ் அல்வாவுடன் வீட்டிற்கு செல்கிறார். அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு எனக்கு வேலை கிடைத்துவிட்டது எனக் கூற, அது மட்டும் இல்லாமல் ரோகினிக்கு அல்வா ஊட்டி விடுகிறார். உடனே மீனாவிடம் அல்வாவை காட்ட ஏற்கனவே கல்யாணத்துக்கு முன்னாடி நீ அல்வா கொடுத்தது போதும் என முத்து பேசுகிறார்.

அடுத்த காட்சியில் முத்து அல்வாவை சாப்பிட்டுவிட்டு இது அந்த பெரிய கடை அல்வா தானே என கரெக்ட்டாக கூறுகிறார். உடனே முத்துவுக்கு போன் வருகிறது. எனக்கு சவாரி இருக்கிறது என கிளம்பி விடுகிறார். அடுத்த காட்சியில் மீனாவிடம் பூ வாங்க வந்த ஒருவர் எதற்காக மஞ்ச கயிறு போட்டு இருக்க உன் தாலி செயின் எங்கே என பேசுகிறார்கள்.

அதற்கு மீனா புகுந்த வீட்டை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். அந்த சமயத்தில் விஜயா வெளியே வந்து இங்க என்ன நின்னுட்டு இருக்க வந்து டிபன் செய்யலையா என கத்திவிட்டு செல்ல இதோ வருகிறேன் அத்தை என்ன பேசுகிறார். இவை அனைத்தையும் அண்ணாமலை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை உள்ளே போனதும் மீண்டும் பூவாங்க வந்த அந்த லேடி மீனாவிடம் நல்லா இருக்கேன்னு சொன்னா ஆனா இந்த விரட்டு விரட்டுறாங்க என பேசுகிறார். மாமா மாத்திரை போடணும் அதனாலதான் பதட்டத்தில் கத்திட்டு போறாங்க என பேசி சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

நாளைய எபிசோடு முத்து தாலி வாங்கி வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் என் பொண்டாட்டிக்காக நானே சம்பாதித்து வாங்கிய தாலி என பேசுகிறார். அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். இதனை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ forty five = forty seven

Back to top button
error: