நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் தற்போது வெற்றி நடை போட்டுக் வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருந்தார். இவரது நடிப்பை பார்த்து தமிழ் ரசிகர்கள் சொக்கி போய் உள்ளனர். மேலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசி வவருகின்றனர். நடிகை சம்யுக்தா மேனன் பக்தி திரைப்படத்திற்கு முன்னர் மலையாள படமான Edakkad Battalion 06 இன்று படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையாமல் படுதோல்வி அடைந்தது. ஆனால் இந்த படத்திற்கு சம்யுக்தா மேனனுக்கு 65 சதவீதம் சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த படம் தோல்வி அடைந்ததை பார்த்த சம்யுக்தா மேனன் இரண்டு நாட்களுக்கு கழித்து தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் அவர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த மெசேஜில், நீங்கள் எனக்கு மீத சம்பளத்தை கொடுக்க வேண்டாம், நீங்கள் கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன். அடுத்த ஒரு நல்ல படத்தில் பணியாற்றலாம் என்று கூறி இருந்தார்.
- Advertisement -
இப்போது இருக்கும் சினிமாவுல முழு சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே டப்பிங் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவோம் என்று நடிகர், நடிகைகள் கூறிவரும் நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் இப்படி மெசேஜ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மற்ற நடிகர்களுக்கு சம்யுக்தா மேனன் ஒரு சிறந்த உதாரணமாக இருந்து வருகிறார் என்று தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற ஜாதியை நீக்குவதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.