சினிமாதமிழ்நாடு

இந்தியன் 2 சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி..!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஒருசில நிபந்தனையுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், படம் வெளியாகும் நாளை (ஜூலை 12) ஒருநாள் மட்டும் 5 காட்சிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. மேலும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடைசி காட்சி நள்ளிரவு, அதாவது அதிகாலை 2 மணிக்கு முன்பாக முடிந்துவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் காலை 9 மணி காட்சி திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் இந்தியன் 2 மாஸ் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களின் ஒருசில பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு இந்தியன் 2 படத்தை திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!