மணிரத்னம் இயக்கியுள்ள ’பொன்னியின் செல்வன்’ 2 திரைப்படம் ரூ.300 கோடிகளை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சுமார் ரூ.500 கோடிகளை வசூலித்து தமிழ் திரையுலகில் வசூல் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மாதம் 28ஆம் தேதி 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டே நாளில் ரூ.100 கோடி வசூலித்ததாக லைகா நிறுவனம் அறிவித்தது.
https://twitter.com/LycaProductions/status/1655520483729870848?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1655520483729870848%7Ctwgr%5Edc3081a3391ed4b7f3900f7eab052fe5d24aa530%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fminnambalam.com%2Fcinema%2Fponniyin-selvan-2-reach-300-cr-in-10-days%2F
இந்நிலையில் தற்போது வரை பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடிகளை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.