மம்முட்டி – ஜோதிகா நடிக்கும் ‘காதல்’ திரைப்படம் வருகிற மே மாதம் இரண்டாம் வாரம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.
மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மம்முட்டி கம்பனி’ தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் பல ஆண்டுகள் கழித்து ஜோதிகா மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளார்.
இதற்கு முன்பு 2009இல் வெளியான ‘சீதா கல்யாணம்’ படத்தின் தான் ஜோதிகா கடைசியாக மலையாளத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஜோ பேபி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கியுள்ளார்.
அந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவானதும் குறிப்பிடத்தக்கது.