சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் ஜெயிலர். தமன்னா, ரம்யா கிருஷ்ணா நடித்த இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இதுவரை இப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் நேற்று ரஜினிகாந்தை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தார். படத்தின் வெற்றியுடன், லாபத்தில் ஒரு பகுதியும் ரஜினிகாந்துக்கு காசோலையாக வழங்கப்பட்டது.
இந்த விஷயத்தை சன் பிக்சர்ஸ் அறிவித்தது. சமீபத்தில் இந்த காசோலையுடன் கலாநிதி மாறன் ரஜினிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். கலாநிதி மாறன் சுமார் ரூ.1.24 கோடி மதிப்பிலான கருப்பு நிற பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சீரிஸ் காரை பரிசளித்துள்ளார்.
A brand new BMW X7 priced at ₹1.24 cr for superstar #Rajinikanth.
REAL success looks really like this.
||#Jailer | #600CrJailer|| pic.twitter.com/Kt37zsEIdh
— Manobala Vijayabalan (@ManobalaV) September 1, 2023
இதற்கிடையில் ஜெயிலர் படம் புதிய சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய அனைத்து மாநிலங்களிலும் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.50 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.
