ஷாருக் கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில், ஷாருக் கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை, ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் கௌரி கான் தயாரிக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக பட தயாரிப்பாளர் கௌரி கான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானவுடன் ரசிகர்கள் இந்த படத்தின் மீது அதிக ஆர்வத்தில் உள்ளனர்.