ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் ஜூன் 2ஆம் வாரம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. அறிவிக்கப்பட்டதில் இருந்து இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் முதல் பாடல் அடுத்த மாதம் 2ஆம் வாரம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூலை மாதம் சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.
