பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியான துணிவு, வாரிசு ஆகிய இரு திரைபடங்களும், 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளன.
அஜித் நடித்த துணிவு படமும், நடிகர் விஜய்யின் வாரிசு படமும் கடந்த 11ம் தேதி வெளியாகின. ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவ்விரு படங்களும், வெளியான 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் இவ்விரு படங்களும் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு இன்று வெளியாவதால், வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
