நகைக்கடையில் அசிங்கப்பட்ட முத்து, மீனா.. மனோஜின் திருட்டுதனம் வெளி வருமா? பரபரப்பான திருப்பம்!!
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில், விஜயாவிடம் கொடுத்த நகைகளை முத்துவும் மீனாவும் கேட்க, அவர் இந்தா இருக்கு எடுத்துக்கிட்டு போங்க என சொல்லுகிறார். அதை எடுத்துச் செல்லும் முத்துவும் மீனாவும் நேராக நகை கடைக்கு செல்கின்றார்கள்.
இதன்போது அங்கு தனது நகையை கொடுத்து செயின்னாக மாற்ற கொடுக்கிறார் மீனா. இதன் போது நகையை செக் பண்ணி பார்த்த நகைக்கடைக்காரர், இது கவரிங் நகை, நீங்க எழும்புங்க என்று முத்துவையும் மீனாவையும் அசிங்கப்படுத்த முனைகின்றார்.
இதன் போது அங்கிருந்து நகை கடைக்காரர் ஒருவர், அந்த நகை கவரிங் நகை.. எப்படி மாறிடுச்சு என மீனாவிடம் கேட்கின்றார். அதன் பின்பு முத்து விஜயாவுக்கு கால் பண்ணுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் மனோஜ் 4 லட்சத்துக்கு சாமான் கொடுத்து ஏமார்ந்த நிலையில், விஜயாவிடம் வந்து உதவி கேட்கிறார். இதனால் அவருக்கு நாலு அடி போட்ட விஜயா, மீனாவின் நகைகளை அடகு வைக்குமாறு கொடுக்கிறார். ஆனால் மனோஜ் அந்த நகைகளை விற்று விடுகின்றார்.
அதன் பிறகு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வாங்கி வைத்துள்ளார். தற்போது மீனா, முத்து அந்த நகையை எடுத்துக்கொண்டு நகை கடைக்கு போன நிலையில் அது கவரிங் நகை என தெரியவந்துள்ளது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.