நடிகர் விக்ரம் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் கோடை விருந்தாக திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திரைப்பட ரிலீஸ் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் மே மாதம் 19 ஆம் தேதியன்று கோடை விருந்தாக திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment