தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் மீண்டும் தள்ளிப்போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய ஹிட் படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படம் வாத்தி. விவேக் ஆட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. கல்வித்துறையில் நடைபெறும் முறைகேட்டை கேள்விகேட்கும் ஒருபடமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிவி.பிரகாஷ் இசையில் உருவான படத்தின் முதல் பாடல் ‘வா வாத்தி’ ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. சென்ற ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அது சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு, பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் வெளியீடு மீண்டும் தள்ளிப்போக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.