நடிகர் பிரபுவின் உடல்நிலை குறித்த வதந்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். பிரபு நலமுடன் இருப்பதாகவும், இரண்டு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெளிவுபடுத்தினர்.
சமீபத்தில், சிறுநீரக கற்களால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரபுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
- Advertisement -
இதற்கு பதிலளித்த அவரது குடும்பத்தினர், சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். பிரபு நலமுடன் இருப்பதாக கூறினர்.