சினிமா

பிப்ரவரி 9ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் அயலான்!!

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தை 24 AM ஸ்டுடியோஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் பிப்ரவரி 9-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty three − = forty six

Back to top button
error: