சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார், சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அப்பலோ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
வயிற்றுப்போக்கு காரணமாக அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடன் மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோர் உள்ளனர். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வேண்டி பதிவிட்டு வருகின்றனர்.