பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான மனோபாலா (69) உடல்நலக் குறைவால் காலமானார்.
மனோபாலா ஒரு நடிகராகவும் இயக்குநராகவும் திரையுலகில் தவிர்க்க முடியாத நபராக இருந்தார். 1953ல் கோவையில் பிறந்த இவர், 1982ல் வெளிவந்த ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராகவும், 1994ல் தாய்மான் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து நட்புக்காக, பிதாமகன், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, துப்பாக்கி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் சதுரங்க வேட்டை, பாம்புச்சட்டை போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மனோபாலாவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.