சினிமா

3 கோடி ரூபாயில் கேக் வெட்டிய பிரபல நடிகை!

சினிமா பிரபலங்களின் வாழ்க்கை என்பது, மிகவும் ஆடம்பரமானது என்று பலரும் அறிந்திருப்போம். 1 லட்சத்திற்கு ஆடை வாங்குவது, 100 கோடியில் வீடு கட்டுவது என்று சகல சௌகரியங்களுடன் வாழ்க்கை நடத்துவார்கள் என்று செய்திகளில் கேட்டிருப்போம்.

பிரபல நடிகை ஒருவர், இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்றுள்ள சம்பவம் தற்போது நடந்துள்ளது. அதாவது, லெஜெண்ட் படத்தில் நடித்துள்ள ஊர்வசி ரௌட்டாலா, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

24 கேரட் தங்கமுலாம் பூசிய இந்த கேக்கை, பிரபல பாடகர் ஹானி சிங் தான், அந்த நடிகைக்கு பரிசாக அளித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

forty nine + = fifty one

Back to top button
error: