பத்து தல படத்தின் 2-வது பாடல் இன்று (மார்ச் 14ம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே உட்பட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
- Advertisement -
இத்திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்று படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
- Advertisement -
இதையடுத்து படத்தின் 2-வது பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது பாடல் வெளியாகும் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் சிறிய வீடியோ வெளியீட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே அதன்படி, பத்து தல படத்தின் 2-வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.