இந்தியாவிளையாட்டு

‘சிகெரட், தண்ணி எந்த பழக்கமும் இல்ல..’ ‘தினம் வொர்க் அவுட் பண்ணுவார்..’ அப்படி இருந்தும் மாரடைப்பு ஏன் வந்தது..? – கங்குலிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்..!

முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். தற்போது அவரது மருத்துவரான டாக்டர் தேவி ஷெட்டி சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இல்லை, நல்ல உடற்பயிற்சி செய்பவர், உடற்தகுதி உடைய சவுரவ் கங்குலிக்கு ஏன் மாரடைப்பு ஏற்பட்டது என்பதை குறித்து விளக்கியுள்ளார்.

இதுகுறித்து கூறிய மருத்துவர் தேவி ஷெட்டி, ‘என்னதான் நாம் தரமான வாழ்க்கை சூழலில் வாழ்ந்து வந்தாலும், நல்ல பழக்க வழக்கங்களை கறராகக் கடைப்பிடித்தாலும் இந்தியர்களின் நிலை இதுதான். நாம் இதயம் தொடர்பான செக்-அப்களை சீரான இடைவெளியில் மேற்கொள்ளவில்லை என்றால் நமக்கும் மாரடைப்பு வரும் என்கிறார் கங்குலிக்கு மருத்துவம் பார்த்த குழுவில் இருக்கும் டாக்டர் தேவி ஷெட்டி.

bcci

கங்குலி போன்ற விளையாட்டு வீரர், ரெகுலராக உடற்பயிற்சி செய்பவர், கெட்டப்பழக்கம் இல்லாதவருக்கு எப்படி மாரடைப்பு உருவானது என்பதே பலரது கேள்வி.

அவருக்கு, இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் வால்வ்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி எனும் சிகிச்சை அளித்து அவர் குணமடைந்து விட்டார்.

இந்த இருதய ரத்தக் குழாயில் அடைப்பு பிரச்சினை இந்தியர்கள் பலருக்கு அவர்களது வாழ்நாளில் ஒரு கட்டத்தில் ஏற்படும். அவருக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தற்போது சிகிச்சைக்குப் பிறகு கங்குலி இதயம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைப் போல் வலுவாக இருக்கிறது.

கங்குலிக்கு இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை யாரோ ஒரு டாக்டரால் அறிவுறுத்தப்பட்டதல்ல, டாக்டர்கள் குழுவில் இருக்கும் அனைவரும் சேர்ந்த எடுத்த கூட்டு முடிவு. இவரக்ள் அனைவரும் 20-30 ஆண்டுகளாக இருதய சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். எனவே உலகில் கிடைக்கும் சிறந்த சிகிச்சை அவருக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Back to top button
error: Content is protected !!